Friday, September 24, 2021
Homeஉலக விவகாரம்அமெரிக்க விசா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அமெரிக்க விசா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே.1. ஒரு அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் எனது கடவுச்சீட்டு எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாவதாக இருக்க வேண்டியுள்ளது?

உங்களிடம் அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு (நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய) இருந்தாக வேண்டும்.

கே. 2. ESTA-விற்கு கட்டணம் எவ்வளவு மற்றும் அதனை யார் செலுத்த வேண்டும்?

வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற அனைவருக்கும் ESTA பதிவு அவசியமாகிறது. ESTA பதிவிற்கு US$14 கட்டணமாக விதிக்கப்படுகிறது. டெபிட் கார்டு அல்லது பின்வரும் கிரெடிட் கார்டுகள் எதையேனும் உபயோகித்து கட்டணத்தைச் செலுத்தலாம்: வீசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ், அல்லது டிஸ்கவர். உங்களிடம் சரியான வகை கிரெடிட் கார்டு இல்லை என்றால், மூன்றாம் தரப்பினர் (பயண முகவர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோர்) உங்களுக்காக உங்கள் ESTA கட்டணத்தைச் செலுத்தலாம். ESTA பதிவு மறுக்கப்பட்டால், கட்டணம் US$4 மட்டுமே.

கே. 3. எனக்குக் இரட்டைக் குடியுரிமை உள்ளது. அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய நான் எந்தக் கடவுச்சீட்டை உபயோகிக்க வேண்டுமா?

அமெரிக்கர் என்றில்லாத பட்சத்தில், நீங்கள் விரும்புகிற நாட்டை உபயோகித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம், ஆனால் உங்களது விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் அனைத்து குடியுரிமைகளையும் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வெளிப்படுத்தியாக வேண்டும். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை  பெற்றவர்களும் கூட, ஒரு அமெரிக்கக் கடவுச்சீட்டை உபயோகித்தே அமெரிக்காவிற்குள் நுழையவும், வெளியேறவும் வேண்டும்.

கே.4 எனது வீசாவை நான் எவ்விதம் நீட்டிக்கலாம்?

ஒரு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை, அதன் வகையைப் பொருட்படுத்தாமல், நீட்டிக்க முடியாது. நீங்கள் ஒரு புதிய வீசாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும்.

கே.5 எனது வீசா விண்ணப்பப் படிவத்தை நான் மின்னணு ரீதியாக சமர்ப்பித்தாக வேண்டுமா?

ஆம், நீங்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்து, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நடைபெறுகிற உங்களது நேர்காணலுக்கு நீங்கள் போகும் போது உங்களோடு DS-160 படிவத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சிட்ட நகலைக் கொண்டு வந்தாக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular