Friday, September 24, 2021
Homeஉலக விவகாரம்அரச தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைகள்!

அரச தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைகள்!

இன்றைய இலங்கையின் அரச தொழில்வாய்ப்பு ஒன்றை  பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான இலக்காக போய்விட்டது.

இலங்கையினை பொருத்தவரை 10 பத்து வருடங்களுக்கு முன் அரச தொழில்வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ள க.பொ. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் போதுமானதாக இருந்தது.

ஆனால் இன்றைய சூழலில் பல்கலைகழக பட்டமொன்று பெற்றிருந்தாலும் அரச தொழில்வாய்ப்பு என்பது சில பட்டதாரிகளுக்கே எட்டாய் கனி ஆகிவிட்டது.

ஆகவே இன்றைய சூழலில் பொருத்தமான தொரு அரச தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள நீங்கள் அடிப்படை தகுதியாக யாதாயினும் ஒரு பட்டப்படிப்பினை நிறைவுசெய்துக்கொள்வதுடன், அதற்கு மேலதிகமாக உங்களது மொழியறிவு, நுண்ணறிவு மற்றும் பொது அறிவு அதாவது உலக அறிவு இவற்றை அதிகம் வளர்த்துக்கொள்வதன் மூலம் இலங்கையில் அரச தொழில்வாய்பபை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது இலங்கையின் அரச தொழில்வாய்ப்புக்களானது பொரும்பாலும் போட்டிப்பரீட்சைகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளதனை அவதானிக்கலாம். ஆகவே மாணவர்களே உங்களது மொழியறிவு, நுண்ணறிவு மற்றும் பொது அறிவு போன்றவற்றில் மிக தேர்ச்சியடைந்துக்கொள்ளுங்கள். அதன்பின் அரச தொழில்வாய்ப்பு உங்களை தேடி வரும்.

இந்த பேனாக்காரன் இணையத்தளமானது உங்களை அரச தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு மிக உறுதுணையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular