Tuesday, August 3, 2021
Homeதிரைவிமர்சனம்இதோ மாஸ்டர் படத்தின் முதல் விமர்சனம்! பார்க்கலாமா? வேணாமா?

இதோ மாஸ்டர் படத்தின் முதல் விமர்சனம்! பார்க்கலாமா? வேணாமா?

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜே.டி என்னும் ஜான் துரைராஜ் (விஜய்) மது போதைக்கு அடிமையாக உள்ளார். சில பிரச்சனைகளில் சிக்கும் விஜய் அதன் காரணமாக பவானி (விஜய் சேதுபதி)-யின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். பின் விஜய் சேதுபதியுடன் போராடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்களை விடுவிக்கிறார், விஜய். இப்படி தொடங்கும் மாஸ்டர்  படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு என தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சேவியர் பிறிட்டோ தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி முக்கிய நடிகரான விஜய்யின் திரைவாழ்வில் இத்திரைப்படம் 64வது திரைப்படமாகும். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் உடன் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணி..

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.

ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது.

இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.

ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது.

இசையும் திரைக்கதையும் செம மாஸ்.

இரண்டாம் பாதியினை இன்னும் கொஞ்சம் விறுவிறுபடுத்தியிருக்கலாம்..

மொத்தத்தில் மாஸ்டர் தரமான பொங்கல் படைப்புதான். நம்பி படத்தை பார்க்கலாம்..

சினியரசன் ரேட்டிங்- 85%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular