Friday, September 24, 2021
Homeராசிபலன்இன்றைய ராசிபலன்-03-06-2021

இன்றைய ராசிபலன்-03-06-2021

மேஷம்

மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. நம்பிக்கைக்குரியவர் கலந்தாலோசித்து சிலமுடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்‌. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்த காரியங்கள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும் . பழைய கடனைத்தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் கலந்தாலோ சித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும்ஆளாவீர்கள். யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular