Tuesday, August 3, 2021
Homeஇலங்கை சினிமாஇலங்கை சினிமா அறிமுகம்

இலங்கை சினிமா அறிமுகம்

இலங்கை சினிமா படைப்புக்களை வெளியிடுவதிலும், விளம்பரப்படுத்துவதிலும் எமது இணையத்தளம் பெருமையடைகின்றது. ஆகவே இலங்கை சினிமா படைப்பாளிகள் உங்களது படைப்புக்களை வெளியிடு செய்வதற்காக எம்மோடு இணைந்துக்கொள்ள முடியும்.

இலங்கையின் சினிமா பற்றிய உரு அறிமுகத்தை தற்போது பார்க்கலாம்

இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 29.12.1951இல் திரையிடப்பட்ட குசுமலதா என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம். இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.சில ஆண்டுகள் கழித்து தமிழில் அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு சமுதாயம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான ஹென்றி சந்திரவன்ச இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

இந்நிலையில் இலங்கை சினிமா படைப்புக்களை வெளியிடுவதிலும், விளம்பரப்படுத்துவதிலும் எமது இணையத்தளம் பெருமையடைகின்றது. ஆகவே இலங்கை சினிமா படைப்பாளிகள் உங்களது படைப்புக்களை வெளியிடு செய்வதற்காக எம்மோடு இணைந்துக்கொள்ள முடியும்.

உங்களது படைப்புக்களை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி cineyarasan@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular