Friday, September 24, 2021
Homeஉலக விவகாரம்கொரோனா காலத்தில் இணையவழி கல்வியை தொடரும் மாணவர்களா நீங்கள்? கவனம்!!

கொரோனா காலத்தில் இணையவழி கல்வியை தொடரும் மாணவர்களா நீங்கள்? கவனம்!!

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. க.பொ.த சாதாரண பரீட்சையை தோற்றவிருக்கும் மாணவர்கள் மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சையை தோற்றவிருக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட மிக  சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையில் இணையதள கல்வியையே அதிகம் பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை மாணவர்களுக்கு வேறு வழிவகைகளும் கிடையாது. ஆனால் சிறந்த முறையில் கணனி வழி கல்வியை கையாழ்வது சிறந்தது. இதன் போது மாணவர்கள் அதிகமாக கணனியை பயன்படுத்துகிறார்கள் என்ன தான் கணனியை பயன்படுத்துவதால் நன்மை இருந்தாலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தொடர்ந்து கணனியை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு பிள்ளைகளை அதிகம் பாதிக்கிறது. தசை வேதனை மற்றும் தோற்பட்டை வலி இடுப்பு வலி போன்றவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல் பார்வை குறைபாடு. கண் அதிக வெப்பமாக இருத்தல் இமைகள் அடிக்கடி துடித்தல் நீரிழிவு நோய் இரத்த கொதிப்பு போன்ற உடற் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

அதே போல் மன அழுத்தம் போன்ற உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனவே மாணவர்களாகிய நீங்கள் கணனிச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது நீங்கள் அமரும் இருக்கையில் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள் இது முதுகு தண்டு வேதனை தோள் பட்டை வலி போன்றவற்றை தடுக்கும். அத்தோடு உங்களது கண்களுக்கும் கணனிக்கு இடையேயான தூரம் சரியான விகிதத்திலிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் ஓரளவு உபாதைகளை தடுக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular